தரையில் மீனாய்
அனலில் புழுவாய்
துடித்துத் துவளுகிறாள்....
இன்பத்தில் திளைத்தற்கு
இத்தனை துன்பமா
அவளுக்கு மட்டும்......
வலித்துப் பெற்றால்தான்
வருமாம் தாய்ப்பாசம்
அப்போ தந்தைப்பாசம்.....
உதட்டைக் கடிகடித்து
உளறிக் கதறுகிறாள்
பிரசவ வைராக்கியமோ
உள்ளே அவள் கதற
வெளியே அவன் பதற
பிறந்தது முதல்மூச்சு.....
ஆறு. ச.மூர்த்தி.
When i reading this, i think of the Pregnancy ward of the hospital, this is what the feeling of the father,when the baby deliver, nice and simple words are used, easy to understand by lay men,Keep it up......
ReplyDelete